
நெகிரி செம்பிலான், ஜூன் 11 – நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முரிஸ் துவாங்கு முனாவிர் (Tuanku Muhriz Tuanku Munawir), தனது இரண்டாவது மகனான துங்கு சைன் அல்-ஆபிடின் (Tunku Zain Al-Abidin) அவர்களை மாநிலத்தின் “துங்கு பங்க்லிமா பெசார்” என்ற மரபுவழி அரச பட்டத்திற்கு நியமித்துள்ளார்.
உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்தப் பதவி முன்பு துங்கு டத்தோ ஸ்ரீ நட்சாருடீன் (Tunku Datuk Seri Nadzaruddin Tuanku Jaafar) வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய பொறுப்பில் துங்கு சைன், அரச குடும்பத்தின் மரியாதையையும் மாநில மக்களின் நலன்களையும் காக்கும் வகையில் செயல்படுவார் என்ற நம்பிக்கையை ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.



