Latestமலேசியா

தெமர்லோவில் போர்ஷே மோதி தீப்பற்றியக் கார்; தம்பதி உயிரிழப்பு

தெமர்லோவில் போர்ஷே மோதி தீப்பற்றியக் கார்; தம்பதி உயிரிழப்பு

தெமர்லோ, பிப்ரவரி-115,

பஹாங், தெமர்லோவில் நேற்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் தம்பதியர் உயிரிழந்தனர்.

கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நோக்கி பயணித்த புரோட்டான் பிரிவே கார், திடீரென பின்புறம் வந்த Porsche Cayenne SUV வாகனத்தால் மோதி சாலையோரம் தள்ளப்பட்டது.

மோதப்பட்ட வேகத்தில் புரோட்டான் கார் தீப்பற்றி எரிந்தது.

அதில், 34 மற்றும் 35 வயது தம்பதியர் காருக்குள்ளேயே சிக்கி உயிரிழந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து, எரிந்த நிலையில் தம்பதியரின் உடலை மீட்டனர்.

போர்ஷே ஓட்டிய 28 வயது இளைஞர் கையில் சிறிய காயம் அடைந்தார்.

அவர் மதுபோதையில் வாகனமோட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கும் நிலையில், விசாரணைக்காக அந்நபர் 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!