Latestமலேசியா

தைவான் பெண் மரணம் போலீஸ் விசாரணைக்கு உதவியாக ராப் பாடகர் நம்வீ தடுத்து வைப்பு

கோலாலம்பூர், நவ 5- தைவானின் சமூக வலைத்தள பிரபலம்
ஷியே யூ ஹிசின் ( Hsieh Yu – Hsin ) கொலை தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உதவும் பொருட்டு மலேசியாவின் ரேப் பாடகர்
நம் வீயை ( Namewee) ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை தடுத்து வைக்கும் உத்தரவுக்கு முதிர்நிலை துணை பதிவதிகாரி முகமட் பைசாட் சுல்கிப்ளி
( Muhammad Faisal Zulkifli ) அனுமதி வழங்கியதாக நம்வீயின் வழக்கறிஞர் ஜோசுவா தே ( Joshua Tay ) தெரிவித்தார்.

இன்று முதல் நவம்பர் 10ஆம் தேதிவரை நம் வீ தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன் டாங் வாங்கி போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சஷாலி அடாம் கூறியிருந்தார். இதனிடையே போலீஸ் விசாரணைக்கு தாம் முழு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக Wee Meng Chee என்ற அசல் பெயரைக் கொண்ட நம்வீ தெரிவித்தார். Hsieh வின் மரணம் குறித்து இன்னமும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் சவ பரிசோதனையின் அறிக்கைக்குப் பிறகே இது குறித்து தெரியவரும் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சுஸ் ( Fadil Marsus ) கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!