
கெப்போங், மார்ச்-16-கோலாலம்பூர், கெப்பொங், பண்டார் மஞ்சளாராவில் உள்ள ஒரு வீட்டில் 5 பேர் புகுந்து தாக்கியதில், ஒரு காதல் ஜோடி காயமடைந்தனர்.
இதில் வேதனை என்னவென்றால், சந்தேக நபர்களில் ஒருவர் அந்த காதல் ஜோடிக்கு நன்கு அறிமுகமான நண்பர் என்பது தான்.
கஷ்ட காலங்களில் பல முறை தங்குவதற்கு இடம் கொடுத்தவர்களின் மடியிலேயே அந்நபர் கை வைத்துள்ளார்.
சந்தேக நபர்கள் பாராங் கத்தி, மின்சார அதிர்ச்சி கருவி, கோல்ஃப் மட்டை ஆகிய ஆயுதங்களுடன் நுழைந்து, இருவரையும் அடித்துக் காயப்படுத்தினர்.
ரொக்கம், கைப்பேசி, அடையாள அட்டை, வங்கி அட்டை மற்றும் ஹோண்டா சிவிக் கார் ஆகியவற்றையும் பறித்துச் சென்றனர்.
போலீஸார் விரைந்து செயல்பட்டு, 2 சந்தேக நபர்களைச் செராஸில் கைதுச் செய்துள்ளனர்.
இருவரும் விசாரணைக்காக 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியவர்களுக்குப் பிடிக்க போலீஸ் வலை வீசியுள்ளது.



