
கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 – நேற்றிரவு, பந்தாய் டாலாம் ரயில் நிலையம் அருகேயுள்ள மைடின் மார்ட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில், பல கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
இந்தத் தீவிபத்தில் 14 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 80 சதவீதம் வீடுகள் முழுமையாக எரிந்து சாம்பளாகியுள்ளன.
மேலும் நான்கு கடைகள் தீயில் சேதமடைந்துள்ள நிலையில், அதில் மூன்று கடைகள் மற்றும் மைடின் மார்ட்டின் மேல் தளம் முழுவதும் தீவிபத்தில் மோசமாக சேதமடைந்துள்ளன.
சேதங்கள் அதிகம் இருந்தாலும், எந்தவொரு உயிரிழப்பும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று மூத்த உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் முகமட் கைருல் அனுவார் கூறியுள்ளார்.
தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்பு குழுவினர், மரத்தால் கட்டப்பட்ட கட்டடங்களில் தீ வேகமாக பரவிய நிலையில், அத்தீ அருகிலுள்ள வணிகப் பகுதிகளில் பரவுவதற்கு முன்பாகவே கட்டுப்படுத்தினர்.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் கண்டறிந்து வருகின்றனர்.