Latestமலேசியா

நாடாளுமன்றத்தில் பிரதமரை மரியாதை நிமித்தம் சந்தித்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்

கோலாலம்பூர், ஜூலை-9 – குறுகியக் கால வருகை மேற்கொண்டு மலேசியா வந்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மரியாதை நிமித்தம் சென்று கண்டார்.

ஆஸ்கார் நாயகனுடனான அச்சிறப்பு சந்திப்பின் புகைப்படங்களைப் பிரதமரே தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

உள்ளூர் – அனைத்துலக கலை மற்றும் இசைத்துறை குறித்து ரஹ்மானுடனான சந்திப்பின் போது பேசப்பட்டது.

சுஃபி இசையை (sufi music) தற்போது தாம் ஆழமாக ஆராய்ந்து வரும் தகவலையும் ரஹ்மான் தம்மிடம் பகிர்ந்துக் கொண்டதாக பிரதமர் சொன்னார்.

டிஜிட்டல் மயமாகியுள்ள இசைத் துறை, AI அதிநவீன தொழில்நுட்பம் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

அச்சந்திப்பின் போது, தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனும் உடனிருந்தார்.

ஜூலை 27-ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவிருக்கும் தனது மாபெரும் கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு இசைப்புயல் அழைப்பு விடுத்ததாகவும் டத்தோ ரமணன் கூறினார்.

அக்கலை நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக செய்தியாளர் சந்திப்புகளில் பங்கேற்பதற்காக ரஹ்மான் மலேசியா வந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!