
நீலாய், நவம்பர்-6,
நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், வேலை பெர்மிட் இல்லாமல் வேலை செய்து வந்த 184 வெளிநாட்டினர், கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களில் 163 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள் ஆவர்.
பெரும்பாலும் வங்காளதேசம், மியன்மார், பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து அவர்கள் வந்திருப்பது தெரியவந்தது.
பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில் சோதனை அதிகாரிகள் வந்திறங்கியதை கண்டதும், பலர் மின்சார உற்பத்தி இயந்திரங்களின் பின்னால் அல்லது தொழிற்சாலை பொருட்களின் படுக்கைகளின் பின்னால் ஓடி மறைந்துகொண்டனர்.
எனினும் ஒருவரையும் விடாமல் பிடித்து பரிசோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள், பெர்மிட் இல்லாதோரை விசாரணைக்காக லெங்கேங் குடிநுழைவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்க அழைத்துச் சென்றனர்.



