Latestமலேசியா

நெகிரி செம்பிலான் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமன ரத்து அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியீடு

சிரம்பான், செப்டம்பர்-25,நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டதற்கான அரசாணை அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

​மாநில சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் உத்தரவின் பேரில், இந்த பதவி நீக்கம் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​நெகிரி செம்பிலான் மாநில அரசியல் சாசனப்படி, மந்திரி பெசாரைத் தவிர மற்ற ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆட்சியாளரின் விருப்பத்தின் பேரிலேயே பதவியில் நீடிக்க முடியும்.

அதனடிப்படையில், ஆட்சியாளருக்கு அளித்த விசுவாசப் பிரமாணத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இவர்களது நியமனம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

​பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களில் அம்னோவைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள், ம.சீ.ச, பாஸ் மற்றும் வாவாசான் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினரும் அடங்குவர்.

​முன்னதாக, துவாங்கு முஹ்ரிஸ் ஆட்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக இந்த ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சர்ச்சை அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இவர்களின் பதவி நீக்கம் செல்லாது என மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் கூறிக் கொண்ட நிலையில், துவாங்கு முஸ்ரிஸ் கட்டளைக்கிணங்க இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!