
நெகிரி செம்பிலானின் பாகாத்தான் ஹராப்பான் (PH) மந்திரி பெசார் அமினுடின் ஹரூனுக்கு வழங்கிய ஆதரவை மாநில UMNO திடீரென வாபஸ் பெறுவதாக அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் தலைமையின் மீது நம்பிக்கை இழந்ததால், மாநிலத்தின் 14 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த முடிவாக இது எடுக்கப்பட்டதாக UMNO மாநிலத் தலைவர் ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த தீர்மானம் தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் விரைவில் மாநில சட்டமன்றத் தலைவர் மற்றும் செயலாளருக்கு அனுப்பப்படும் என்றார்.
மேலும், நடப்பில் உள்ள அரச மரபு தொடர்பான விவகாரம் பொதுமக்களுக்கு தெரிந்த பின்னரே UMNO இதைப் பற்றி அறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்ச்சையாகியுள்ள மாநில அரச விவகாரத்தை மந்திரி பெசார் கையாண்ட விவகாரத்தில் அதிருப்தி கொண்டதால் இந்த முடிவு எடுக்ககப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், மேலும் 12 UMNO மாநில தலைவர்கள் பங்கேற்றனர்.
நெகிரி செம்பிலானில் ஆட்சி அமைக்க மொத்தம் 36 சட்டமன்ற இடங்களில் 19 இடங்கள் தேவை. தற்போது ஹராப்பான் 17 இடங்களையே வைத்துள்ளதால், BN ஆதரவு விலகுவது மாநில அரசை கவிழ்க்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டம்மாக– இரண்டு சாத்தியமான நிலைகள் உள்ளன
ஒன்று மடானி கூட்டணி அரசாங்கத்தை தொடர்வதற்காக, BN தனது உறுப்பினரைக் முதலமைச்சராக நியமிக்க PH-ஐ ஆதரிக்க வலியுறுத்தலாம் அல்லது BN, 5 இடங்கள் கொண்ட பெரிகத்தான் நேஷனலுடன் இணைந்து, மாநிலத்தில் மடானி கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்கலாம்.
என்ன நடக்கும் என்பது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளைப் பொறுத்து அமையும்.



