
ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், மொத்தம் 36 சட்டமன்றத் தொகுதிகளில் 12 இந்திய வேட்பாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் களமிறங்கியுள்ளதாக இவர் சுட்டிக்காட்டுகிறார்.
இவரது கணிப்பின்படி, பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் பெரும்பாலான இந்திய வேட்பாளர்களுக்கு சாதகமான நிலை காணப்பட்டாலும், சிரம்பான் ஜெயா தொகுதியில் டிஏபி மற்றும் மஇகா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
அதேவேளை, ஶ்ரீ தஞ்சோங் தொகுதியில் மஇகா வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், பிகேஆர் வேட்பாளர் தற்போதைக்கு முன்னிலையில் இருப்பதாக இவர் மதிப்பிடுகிறார்.
லுக்குட் தொகுதியில் முதல்முறையாக போட்டியிடும் MIPP வேட்பாளரும், ஜெராம் பாடாங் தொகுதியில் பெர்சத்து வேட்பாளரும் கடுமையான சவாலை எதிர்கொள்வார்கள் என்றும் இவர் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய மற்றும் சீன வாக்காளர்களிடையே டிஏபிக்கான ஆதரவு ஓரளவு குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் அம்னோவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் இவர் தனது மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மலாய் வாக்காளர்களிடையே இன, சமய அடையாள அரசியல் வலுப்பெற்று வருவதாகக் கூறும் அவர், அதனால் பாரிசான் நேசனலுக்கு மாநில ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கணித்துள்ளார்.
எனினும், பெரியசாமி முத்தனின் அரசியல் ஆய்வு மற்றும் தனிப்பட்ட மதிப்பீடு எவ்வாறு தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதை ஆகஸ்ட் -1 மக்கள் எடுக்கும் முடிவில் தெரியவரும்.



