Latestமலேசியா

பசார் செனி LRT நிலையத்தில் வரிசை மீறல்; பையனைக் கன்னத்தில் அறைந்த ஆடவர்

கோலாலம்பூர், மார்ச்-26-தலைநகர், பசார் செனி LRT நிலையத்தில் 13 வயது பையன் ஒருவனை, முன்பின் தெரியாத ஆடவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் அங்குள்ள Rotiboy கடையில் முன், அப்பையன் வரிசையில் நின்றபோது அச்சம்பவம் நிகழ்ந்தது.

அப்போது, வரிசையை முந்திச் சென்றதாகக் கூறி, திடீரென ஓர் ஆடவர் அப்பையனைக் கன்னத்தில் அறைந்ததில், மூக்குப் பகுதியில் இலேசான காயம் ஏற்பட்டு, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அவன் சிகிச்சைப் பெற்றான்.

உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீஸ், சம்பவத்தின் போது அப்பையன் தான் அங்கு முதல் வாடிக்கையாளர் என்றும் வேறு யாரும் அங்கு வரிசையில் நிற்கவில்லை என்றும் உறுதிச் செய்துள்ளது.

இந்நிலையில், 40 வயதிலான சந்தேக நபரைத் தேடும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!