
கோலாலம்பூர், மார்ச்-23-பட்டப்பகலில் சீன சுடுகாட்டில் ஒழுங்கீனத்தில் ஈடுபட்ட ஒரு ஜோடியின் வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கல்லறையில் கொஞ்சமும் கூச்சமின்றி முழு நிர்வாணமாக ஆடவரும், அரை நிர்வாணத்தில் பெண்ணும் அந்த ஒழுங்கீனத்தில் ஈடுபட்டதை, சீன மாது கைப்பேசியில் பதிவுச் செய்துள்ளார்.
“கல்லறை போன்ற புனிதமான இடத்தில் உங்களுக்கு கசமுசா கேட்கிறதா? இது முதல் தடவை அல்ல. இப்போதே போலீஸ் போகிறேன்” என அம்மாது, அந்த ஜோடியை கடிந்துகொள்வதும் வீடியோவில் கேட்கிறது.
சுதாகரித்துக்கொண்ட அவ்வாடவர், கால்சட்டையை மாட்டிக் கொண்டு, அந்த சீன மாதுவிடம் ‘sorry’ என மன்னிப்புக் கேட்கிறார்.
அதற்கு அம்மாது “மன்னிப்பெல்லாம் கிடையாது. நான் இந்த வீடியோவை போலீஸிடம் ஒப்படைக்கிறேன்” எனக் கூறுவதோடு வீடியோ முடிகிறது.
இச்சம்பவம் எங்கு, எப்போது நடைபெற்றது என்பது தெரியவில்லை.
போலீஸ் தரப்பிலிருந்தும் இதுவரை அறிக்கை எதுவும் இல்லை.
பொது இடத்தில் அநாகரீகத்தின் உச்சத்துக்குச் சென்ற அந்த ஜோடியை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க சமூக ஊடகங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.



