பத்து அன்னாம், நவம்பர்-2,
ஜோகூர், செகாமாட், பத்து அன்னாமில் மோட்டார் சைக்கிள் இரைச்சலால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் 30 வயது ஆடவர் கொல்லப்பட்டார்.
தீபாவளியன்று இரவு 9 மணியளவில் தாமான் செஜாத்தியில் ஆடவர்களும் பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில், பாராங் கத்தியால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து அவ்வாடவர் உயிரிழந்தார்.
இதையடுத்து பதின்ம வயது முதல் 40 வயது வரையிலான 2 ஆண்களும் ஒரு பெண்ணும் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை அதிகாலை கைதாகினர்.
அத்தாக்குதலில் ஈடுபடாத ஆனால், சந்தேக நபரின் வீட்டுக்கு வெளியே இருந்த வாகனங்களைச் சேதப்படுத்திய 3 ஆடவர்களும் கைதாகினர்.
சம்பவத்தின் போது, கொலையுண்ட நபரும் அவரின் நண்பர்களும் சந்தேக நபரின் வீட்டின் முன்புறத்தில் மோட்டார் சைக்கிளில் எண்ணெயை வேகமாகத் திருவியிருக்கின்றனர்.
இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறி கடைசியில் கொலையில் முடிந்தது.