Latestமலேசியா

பத்து காஜா இந்திய குடியிருப்புப் பகுதியில் Pickleball விளையாட்டு மைதானத்திற்கு RM50,000 மானியம்-சிவகுமார்

பத்து காஜா, நவம்பர் 23 – சமூகத்தில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு உள்ள ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்துவருவதைக் கண்டு தேசா சங்காட் இந்திய குடியிருப்பு பகுதியில் Pickleball விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் RM50,000 வழங்கியுள்ளார்.

மக்கள் இன்று ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளார்கள். மேலும் பாதுகாப்பாகவும் முறையாகவும் உடற்பயிற்சி செய்யக்கூடிய இடங்களைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த மைதானம் அவசியமாகிறது என்றார் சிவகுமார்.

அவ்வகையில் சமூக ஆரோக்கியம், நல்லுறவு மற்றும் மக்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்குமான முதலீடு இதுவாகும். இந்த விளையாட்டு மைதானம், இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும் என நம்புவதாக சிவகுமார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!