Latestமலேசியா

பத்து பூத்தே விவகாரத்தில் ஒருதலைப்பட்ச முடிவு எடுக்கப்பட்டது – டாக்டர் மகாதீரின் முன்னாள் அமைச்சர்கள் உறுதிப்படுத்தினர்

கோலாலம்பூர். டிச 11 -பத்து பூத்தே விவகாரத்தில் மலேசியாவின் மேல் முறையீட்டை கைவிடுவதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஒருதலைப்பட்சமான முடிவை எடுத்ததாக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பக்காத்தான் ஹராப்பானின் மூன்று தலைவர்கள் உறுதிப்படுத்தினர். முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில், மகாதீர் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்த அந்தோனி லோக், மற்றும் அப்போதைய தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு ஆகியோர் இத்தகவலை வெளியிட்டனர். முடிவு எடுத்த பின்னர்தான் டாக்டர் மகாதீர் இது குறித்து தங்களிடம் தெரிவித்தாக அவர்கள் கூறினார். மகாதீரின் மறுஆய்வை நிறுத்துவதற்கான முடிவு 2018ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதியன்று , அமைச்சரவைக்கு குறிப்பிடாமல், தலைமை வழக்கறிஞர்
Solicitor – general லுக்கு எழுதிய கடிதத்தில் மகாதீரின் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். அமைச்சரவை கூடுவதற்கு முன், மே 23 ஆம் தேதி காலையில் சிங்கப்பூருக்கு அவர் தகவல் தெரிவித்திருந்தார்.

முடிவு எடுக்கப்பட்ட பிறகுதான், மே 23 ஆம்தேதி பிற்பகலில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மகாதீர் தெரிவித்தார். இது நிகழ்ச்சி நிரலின் கீழ் ஒரு ‘அறிவிப்பு’ மட்டுமே என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒரு முடிவுக்கு வருவதற்கான விவாதம் அல்ல என வான் அஸிஸா, அந்தோனி லோக் மற்றும் முகமட் சாபு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். எனவே, இந்த நடவடிக்கையை ஆட்சேபிக்கவோ அல்லது ஆதரிக்கவோ எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை அமைச்சரவைக்கு கொண்டுவந்தபோது வான் அஸிசா , அந்தோனி லோக் , முகமட் சாபு ஆகியோர் எதிர்க்கவில்லையென மகாதீர் இதற்கு முன் கூறியிருந்து தொடர்பில் அவர்கள் மூவரும் இந்த அறிக்கையை இன்று வெளியிட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!