
கோலாலம்பூர், அக்டோபர் 28 –
கடந்த வெள்ளிக்கிழமை,கிள்ளான் பள்ளத்தாக்கில் ‘bunga ganja’ எனப்படும் கஞ்சா மொட்டுகளை விநியோகித்து வந்த போதைப்பொருள் கும்பலை போலீசார் வளைத்து பிடித்தனர்.
இந்த அதிரடி சோதனையில், 47 மற்றும் 56 வயதுடைய ஒரு ஆண், பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரை மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 18.5 கிலோ கிராம் எடையிலான கஞ்சாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சுஸ் (Datuk Fadil Marsus) தெரிவித்தார்.
பழைய கிள்ளான் சாலையிலுள்ள கான்டோமினியம் ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற சோதனையில், சந்தேகநபர்கள் இருந்த Proton Exora வாகனத்தில் இந்தக் கஞ்சாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 553,500 ரிங்கிட் எனவும் இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றதென்று போலீசார் தெரிவித்தனர்.



