
பாசீர் கூடாங், மார்ச்-28-ஜோகூர், பாசீர் கூடாங்கில் தந்தை ஓட்டிச் சென்ற லாரி நேற்று காலை தீ பிடித்ததில் 4 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தான்.
காலை 10.46 மணிக்கு, Iskandar Halal Park-கிற்கு அருகே ஒரு லாரி தீப்பிடித்ததாகத் தீயணைப்பு-மீட்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.
சில நிமிடங்களில் 6 பேர் கொண்ட குழு சம்பவ இடம் விரைந்தது.
அப்போதே லாரியின் முன்பகுதி 60 விழுக்காடு தீயில் அழிந்துபோயிருந்தது.
அங்கிருந்த பொது மக்கள், 6 தீயணைப்புக் கருவிகள் மற்றும் மண்வாரி இயந்திரம் மூலம் மணலை வீசி தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் தீ வேகமாகப் பரவியது.
லாரியில் இருந்த தந்தை உயிருடன் தப்பினார்; ஆனால், மகன் உள்ளேயே சிக்கிக் கொண்டு உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது.
தீயணைப்பு வீரர்கள் மதியம் 1.30 மணி வரை போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



