Latestமலேசியா

பாரதிராஜாவுக்கு மலேசியாவில் ‘முதல் மரியாதை’ புகழாஞ்சலி விழா

கோலாலம்பூர், அக்-1- தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையும், கிராமிய மண் வாசனையைத் திரையுலகிற்குப் பரிசளித்தவருமான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் கலைப் பங்களிப்பைப் போற்றும் வகையில், மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் சார்பில் ‘முதல் மரியாதை’ எனும் பிரம்மாண்ட புகழாஞ்சலி மற்றும் பாராட்டு விழா அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை Shenga Convention Hall-ல் நடைபெறும் இந்நிகழ்ச்சியை Malaysian Indian Sports & Cultural Foundation (MISCF), கண்ணதாசன் அறவாரியம், YASI மற்றும் Majlis முக்குலத்தோர் Malaysia உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர். ராதிகா, பாரதிராஜா இயக்கத்தில் திரையுலகில் அறிமுகமானவர் என்பதால், அவருடனான தனது கலை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். ம.இ.கா தேசியத் தலைவர் Tan Sri SA Vigneswaran சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

பாரதிராஜாவின் வாழ்க்கை, திரைப்படப் பயணம் மற்றும் அரிய பேட்டிகளை உள்ளடக்கிய 10 முதல் 15 நிமிட குறும்படமும் திரையிடப்படவுள்ளது. இதனுடன், அவரது புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களை மையமாகக் கொண்ட இசை மெட்லி மற்றும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

இவ்வேளையில், நவீன தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் இளைஞர்கள் கலைத்துறையில் பழைய கலைஞர்களின் வரலாற்றையும் படைப்புகளையும் அறிந்து கொள்வது எதிர்கால வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என ஏற்பாட்டுக் குழுத் தலைவர், தாப்பா நாடளுமன்ற உறுப்பினர் மற்றும் மஇகா துணை தலவருமான Datuk Seri M. Saravanan வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சி இரங்கல் நிகழ்வாக மட்டுமின்றி, பாரதிராஜா தமிழ் சினிமாவுக்கு வழங்கிய கலைப் பங்களிப்புகளைக் கொண்டாடும் விழாவாக அமையும் என MISCF தலைவர் டத்தோ T. மோகன் ம.இ.கா தலைமையகத்தின்  நேதாஜி அரங்கங்கில் நடைபேற்ற இன்றய செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு தெரிவித்தார்.

பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் இலவசமாகக் கலந்து கொள்ளலாம். எனினும் அரங்கில் சுமார் 1,000 இருக்கைகள் மட்டுமே உள்ளதால் முன்கூட்டியே வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

இளம் தலைமுறையினர் தமிழ் கலைஞர்களின் வரலாறு மற்றும் பங்களிப்புகளை அறிந்து கொள்ள இந்நிகழ்வு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!