Latest

பாலத்தை கடந்தபோது சபா மின்சார ஊழியர் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டார்

கெனிங்காவ், செப் 17 – Kampung Nuntunan Apin Apin யில் நேற்றிரவு வெள்ளத்திற்குள்ளான ஆற்றுப் பாலத்தை கடந்து சென்றபோது சபா மின்சார ஊழியர் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்ட 30 வயதுடைய ஆடவரும் , அவரது இரண்டு நண்பர்களும் இதற்கு முன்பு தொங்கும் பாலத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை மின்நிலையத்தில் பணிபுரிந்து வந்தனர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள சிமென்ட் பாலத்தைக் கடக்க முயன்றபோது வலுவான நீரோட்டம் அவர்களை தாக்கியது.

அவர்களில் இருவர் பாறையிலிருந்து வெளியேறினர். பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் கயிற்றில் தொங்கிக்கொண்டு இருந்தபோது அக்கயிறு தளர்ந்ததால் அவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து இரவு மணி 9.57 அளவில் தகவல் அறிந்து ஒன்பது பேர் கொண்ட குழுவுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்ததாக கெனிங்காவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் மூத்த உதவித் தலைவர் செவெரினஸ் @ முகம்ட் நிட்ஷாம் ( Severinus @ Mohd Nidzam) கூறினார். போலீஸ் மற்றும் கிராம மக்களும் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதிலும் நேற்றிரவு 11.30 மணிவரை காணாமல்போன ஆடவர் கண்டறியப்படவில்லையென அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!