Latestமலேசியா

புகைமூட்டம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன; உயிரிழப்புகள் இல்லை

கோலாலம்பூர், அக்- 22-நாடு முழுவதும் புகைமூட்டம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன. சுகாதார அமைச்சின் அவசரகாலத் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு மையத்தின் (CPRC) கண்காணிப்புத் தரவுகள் வாயிலாக அவ்விவரம் தெரிய வந்துள்ளது.

அக்டோபர் 18 முதல் நேற்று வரையிலான தரவுகளை, அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், புகைமூட்டம் தொடர்புடைய மூன்று முக்கிய உடல்நலப் பாதிப்புகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

மேல் சுவாசப்பாதைத் தொற்று (URTI) பாதிப்புகள் 72 விழுக்காடு குறைந்து 5,086-லிருந்து 1,424-ஆகவும், ஆஸ்துமா பாதிப்புகள் 58.32 விழுக்காடு குறைந்து 739-லிருந்து 308-ஆகவும் பதிவாகியுள்ளன. அதேவேளை, கண் அழற்சி பாதிப்புகள் 73.10 விழுக்காடு சரிந்து 197-லிருந்து 53-ஆக இறக்கம் கண்டுள்ளன.

மேல் சுவாசப்பாதைத் தொற்று பாதிப்பு 79.1 விழுக்காட்டுடன் முதலிடத்தில் உள்ளது. அதன் பிறகு ஆஸ்துமா 15.7 விழுக்காடாகவும், கண் அழற்சி 5.2 விழுக்காடாகவும் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வேளையில், புகைமூட்டத்தால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!