
ஷா ஆலாம், செப்டம்பர்-8,ஷா ஆலாம், புக்கிட் ஜெலுத்தோங்கில் உள்ள புதரொன்றில் அழுகிய நிலையில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் கிடைத்த தகவலை அடுத்துப் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஷா ஆலாம் மாவட்டப் போலீஸ் அதிகாரி Sarudin Samah தெரிவித்தார்.
சடலத்தின் அருகில் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால், உயிரிழந்தவர் யார் என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
அவர் இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாகியிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் சவப் பரிசோதனைக்காகப் Puncak Alam மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.



