
பத்து பஹாட், ஆகஸ்ட் 12 – புதிதாகப் பிறந்த குழந்தையை உணவுக் கடையில் கைவிட்டு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புதுமணத் தம்பதியினருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இன்று யோங் பெங் நீதிமன்றத்தில், நீதிபதியின் முன்னிலையில் அவ்விருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாமான் கோத்தா யோங் பெங் தொழில்துறை பகுதியிலுள்ள கடை ஒன்றில் தங்களுடைய பெண் குழந்தையை பெட்டிக்குள் வைத்து அக்கணவன் மனைவி இருவரும் கைவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது..
கடையின் உரிமையாளர் அக்குழந்தையை கண்டெடுத்து போலீசில் புகார் அளித்தபோது சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.