புது டெல்லி, செப்டம்பர்-29 – இந்தியா, புது டெல்லியில் பூட்டிக் கிடந்த அடுக்குமாடி வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் அழுகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோசமான துர்நாற்றம் வீசியதாக தகவல் கிடைத்து போலீஸ் வந்து பார்த்த போது, ஓர் ஆடவரும், 20 வயதிலான அவரின் 4 பெண் பிள்ளைகளும் வீட்டினுள் இறந்து கிடந்தனர்.
செப்டம்பர் 24-ஆம் தேதியே இறந்ததாக நம்பப்படும் அவர்களின் சடலங்கள் வெள்ளிக்கிழமை தான் மீட்கப்பட்டன.
4 பிள்ளைகளுக்கும் விஷம் வைத்துக் கொன்றவர், பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் சந்தேக்கிறது.
அச்சம்பவத்திற்கான உண்மைக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
என்றாலும், கடந்தாண்டு புற்றுநோயால் மனைவி காலமானதால் 50 வயது அந்நபர் பெரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
அவரோடு, அவரின் பிள்ளைகளும் அக்கம் பக்கத்தாரோடு பேசுவதை நிறுத்திகொண்டு தனிமையில் வாழ்ந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.