
பூச்சோங், ஏப்ரல்- 5 – நேற்று மாலை பெய்த கனமழையால் சிலாங்கூர், பூச்சோங் IOI Mall பேரங்காடி அருகே திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
நெடுஞ்சாலையில் வெள்ள நீர் ஏறியதால் போக்குவரத்து நிலைக்குத்தியது.
வலப்பக்கச் சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கியிருக்க, இடப்பக்கச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது.
வெள்ள நீரால், வாகனங்கள் பயணத்தைத் தொடர முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
நிலைமையைச் சமாளிக்க நெடுஞ்சாலைப் பராமரிப்புக் குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இரவு வாக்கில் வெள்ள நீர் வற்றி போக்குவரத்து மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியது.