
பெங்களூரு, அக்டோபர்-23 – தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் பெங்களூருவில் கட்டுமானத்திலிருந்த கட்டடம் சரிந்து விழுந்ததில், ஒருவர் கொல்லப்பட்டார்.
மேலும் ஐவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக ஐயுறப்படுகிறது.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்திய மீட்புக் குழுவினர் இதுவரை 14 பேரைக் காப்பாற்றியுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக அங்கு அடைமழை பெய்து வந்த நிலையில், கட்டடம் சரிந்துள்ளது.
அது குறித்து கருத்துரைத்த கர்நாடக துணை முதலமைச்சர், இயற்கையின் சீற்றத்தை தடுத்து நிறுத்த முடியாதென்றாலும், கட்டட நிர்மாணிப்பில் கோளாறுகள் இருந்தால் அதனை அப்படியே விட முடியாது எனக் கூறினார்.
விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.
அந்த 6 மாடிக் கட்டடம் இடிந்து விழும் வீடியோக்கள் முன்னதாக வைரலானது குறிப்பிடத்தகக்கது.