Latestமலேசியா

பெண்ணையும் அவரது தந்தையையும் கத்தியால் குத்திய ஆடவன் 7 நாள் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், நவ 8 – பினாங்கு ஆயர் ஹீத்தாமில் அடுக்ககக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் ஒரு பெண்ணையும் அவரது தந்தையும் கத்தியால் குத்தியது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆடவன் விசாரணைக்கு உதவும் பொருட்டு ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான். 32 வயதுடைய அந்த நபர் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டதால் காயம் அடைந்தபோதிலும் அவனது நிலைமை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவனுக்கு பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவன் இறந்துவிட்டதாக வெளியான தகவல் பொய் செய்தி என பினாங்கு வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் லீ சுவி சேன் ( Lee Swee Sake ) தெரிவித்தார். அந்த ஆடவன் போதைப் பொருளை பயன்படுத்தியிருக்கிறானா இல்லையா என்பதை கண்டறிவதற்காக அவனது இரத்த பரிசோதனையின் முடிவுக்காக போலீஸ் காத்திருக்கிறது.

நேற்று பண்டார் பாரு பார்லிம் ( Farlim) அடுக்ககத்தில் நண்பகல் மணி 12.54 அளவில் சந்தேகத்திற்குரிய வகையில் அந்த ஆடவன் கையில் கத்தியுடன் காணப்பட்டதாகவும் போலீசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடுக்ககத்தின் கீழ் தளத்தில் லிப்ட்டிற்கு அருகே 62 வயது ஆடவர், அவரது 30 வயது மகள் இறந்து கிடந்ததோடு அந்த சந்தேகப் பேர்வழியும் உடலில் இரத்தக் கறையுடன் தரையில் கிடந்துள்ளான். இதனிடையே மரணம் அடைந்த பெண் மற்றும் அவரது தந்தையின் உடல்கள் இன்று மாலையில் தஞ்சோங் தோக்கோங்கில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!