
பெந்தோங், ஆகஸ்ட் 18 – பெந்தோங்கில் Jalan Bentong-Karak சாலையில் எதிர்திசையில் கார் ஓட்டியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவிய 55 விநாடி காணொளியை பார்த்த பிறகு, போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டுநரிடம் வாக்குமூலம் பெற்றனர். Proton Iriz காரையும் போலீசார் சோதனைக்காக கொண்டு சென்றனர்.
எதிர்திசையில் கார் சென்றதால் மற்ற வாகன ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை மெதுவாக ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், இந்த சம்பவத்தில் விபத்து எதுவும் ஏற்படவில்லை.



