பெய்ஜிங், அக் 31 – சீனாவில் தங்களது வகுப்பு தோழனை கொலை செய்த குற்றத்திற்காக 13 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனையும் மற்றொரு சிறுவனுக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஷாங் ( Zhang ) மற்றும் லீ (Lee ) என்ற குடும்ப பெயருடன் விளங்கும் அந்த இரண்டு பதின்ம வயது சிறார்களும் 13 வயது சிறுவனை கொலை செய்ததில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த இருவரும் தங்களுக்கு 12 வயதாக இருக்கும் போது தங்களது வகுப்பைச் சேர்ந்த சக மாணவனை கொலை செய்த பின்னர் அவனது சடலத்தை புதைத்துள்ளனர்.
இந்த படுகொலையில் நேரடியாக தொடர்பில்லாத அவர்களது மற்றொரு நண்பனுக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் சக மாணவனை கொடுரமாக கொலை செய்த குற்றத்திற்கு முழு பொறுப்பு வகிப்பதால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.