Latestமலேசியா

பெர்லீஸ், கெடா மற்றும் பேராக்கில் வெப்ப அலை

கோலாலம்பூர், ஏப் 27-பெர்லிஸ் முழுமையும் வெப்ப அலை பாதிப்பு இருந்தாலும் கெடா மற்றும் பேராக்கின் சில பகுதிகளில் வெப்ப அலைகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேராக்கில் உள்ள Hulu Perak மாவட்டத்துடன், கெடாவில் Kota Star , பாலிங், சிக்,Pokok Sena மற்றும் பென்டாங் மாவட்டங்களும் வெப்ப அலையின் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபகற்பத்தில் உள்ள மற்ற பதினான்கு பகுதிகள் வெப்ப அலையின் முதலாவது தாக்கத்தை எதிர்நோக்கியிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கெடாவில் Langkawi, Padang Terap, Kubang Pasu, Kulim, Kuala Muda and Bandar Baharu ஆகிய இடங்களும் பேராவில் Selama, Kuala Kangsar, Kinta and Perak Tengah , பஹாங்கில் ஜெரண்டுட் மற்றும் ஜோகூரில் செகமாட்டிலும் வெப்ப நிலை பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினாங்கில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் வெப்ப அலையின் பாதிப்பை எதிர்நோக்குகின்றன.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான தினசரி வெப்பநிலை நீடிப்பதை வெப்ப அலைகள் என வானிலைத்துறை வரையறுக்கிறது.

இதே காலகட்டத்தில் 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடரும்போது முதலாவது நிலை என்ற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!