Latestமலேசியா

பேராக் செமோர் மளிகைக் கடையில் பட்டப்பகலில் கத்திமுனையில் கொள்ளை: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

ஈப்போ, ஜூன்-4,-பேராக், செமோரில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் மே 31-ஆம் தேதி கத்திமுனையில் கொள்ளையடித்த மூன்று நபர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கையில் பாராங் கத்திகளுடன் கடைக்குள் நுழைந்த அந்த கும்பல், அங்கிருந்த 1,600 ரிங்கிட் ரொக்கம் மற்றும் சில மதிப்புமிக்கப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் கூறியது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இச்சம்பவத்தின் வீடியோ அடிப்படையில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இதே கும்பல் அதே நாளில் பினாங்கு, நிபோங் திபாலில் உள்ள மற்றொரு கடையிலும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம், ஆயுதமேந்திய கூட்டுக்கொள்ளை பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!