Latestமலேசியா

போக்குவரத்து சம்மன்களை மைடிஜிட்டல் ID மூலம் செலுத்தும்படி உள்துறை அமைச்சு வலியுறுத்து

கோலாலம்பூர், ஏப்ரல் 21-: போக்குவரத்து சம்மன்களை மைடிஜிட்டல் கணக்குகள் அதாவது MyDigital ID வழி செலுத்துவதற்கு மலேசிய உள்துறை அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

இந்தச் செயலியைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை என்றாலும் அது அரசு கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மைடிஜிட்டல் ஐடியைப் பயன்படுத்துவதை வரவேற்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இச் திதிவாங்சா ஸ்டேடியத்தில் நடந்த காவல் துறை ராயா விருந்தில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசராவும் மலேசிய தலைமை காவல்துறை அதிகாரி டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் மற்றும் மலேசிய துணை காவல்துறை அதிகாரி, டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை அவர்களும் கலந்துக் கொண்டனர்.

இறுதியாக வருங்காலத்தில் மைடிஜிட்டல் கணக்குகளை (MyDigital ID) வைத்திருப்பவர்களுக்கு, மேலும் அதிகமாக தள்ளுப்படிகள் வழங்கப்படும் வாய்ய்புகள் அதிகம் உள்ளன என்பதையும் அவர் தெரிவித்தார்

Pay, traffic fines ,via ,MyDigital ID, urges, Home Ministry,

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!