Latestமலேசியா

போதைப்பொருள் அல்ல, வியாபாரக் கடனுக்காகவே தாய்லாந்தில் மலேசியர் சுட்டுக் கொலை; விசாரணையில் அம்பலம்

பேங்கோக், நவம்பர்-12 – தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் மலேசிய ஆடவர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் போதைப்பொருள் சம்பந்தமானது அல்ல… மாறாக வியாபாரக் கடனால் ஏற்பட்ட தகராற்றினால் என அந்நாட்டு போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொல்லப்பட்டவர் கடந்த காலங்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டிருந்தாலும், இந்த கொலை வியாபாரக் கடனுக்காகவே நடந்தது என அவர்கள் தெளிவுபடுத்தினர்.

கிளந்தான், பாசீர் மாஸை சேர்ந்த 33 வயது Fuad Fahmi Ghazali, இக்கொலையில் முக்கிய சந்தேக நபரான கிளந்தான் முன்னாள் கால்பந்து வீரர் ஒருவருரிடம் சில ஆயிரக்கணக்கில் கடன் வைத்துள்ளார்.

இதனால் கடந்தாண்டு முதலே இருவருக்கும் 2 தடவை பிரச்னை ஏற்பட்டு குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் தலையீட்டால் தீர்க்கப்பட்டது.

இந்நிலையில் தான் மூன்றாவது முறையாக ஏற்பட்ட பிரச்னை முற்றி கொலையில் முடிந்துள்ளதாக, நராத்திவாட் மாநில போலீஸ் தலைவர் சொன்னார்.

துப்பாக்கிச் சூட்டில் இரத்தக் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட Fuad அன்று மாலை உயிரிழந்தார்.

நவம்பர் 1-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, அவரது கர்ப்பிணி மனைவி அருகில் இருந்தார்.

கணவர் 18 முறை சுடப்பட்டதாக மருத்துவமனைத் தரப்பு தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரான 31 வயது ஆடவர் நவம்பர் 2-ஆம் தேதி சரணடைந்து, விசாரணைக்காகக்த் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!