செப்பாங், டிசம்பர்-22, ஆகாய மார்க்கமாக போதைப்பொருள் கடத்தப்படுவதை முறியடிக்க ஏதுவாக, அரச மலேசிய சுங்கத் துறை 20 மோப்ப நாய்களைப் பயன்படுத்துகிறது.
நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் அந்த மோப்ப நாய்களோடு, 66 scan பரிசோதனைக் கருவிகளும் செயல்பாட்டிலிருக்கின்றன.
இவ்வாண்டு மட்டும் ஆகாய மார்க்க போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் 22 விழுக்காடு அதிகரித்துள்ளதால் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அத்துறை கூறியது.
கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் 111 சம்பவங்கள் பதிவான நிலையில், இவ்வாண்டு 135 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வேளையில் போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதில் MAHB எனப்படும் Malaysia Airports Holdings Berhad மற்றும் சுயேட்சை மண்டல அதிகாரத் தரப்புக்கும் இடையில் அணுக்கமான ஒத்துழைப்பும் மிக அவசியமாகும்.
KLIA 1, KLIA 2 போன்ற முக்கிய நுழைவாயில்களில் அமுலாக்க வியூகங்களை வகுக்க அவ்வொத்துழைப்பு உதவுமென சுங்கத் துறை கூறியது.
கடத்தல்காரர்களின் முக்கியப் பாதையாக மாறியுள்ள சரக்கு, தபால் மற்றும் பார்சல் பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.
பொது மக்களும் தகவல் கொடுத்து உதவிட வேண்டுமென சுங்கத் துறை கேட்டுக் கொண்டது.