Latestமலேசியா

போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் திருவிழா

போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஜெயாவில் வீற்றிருக்கும் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் திருவிழா நாளை 3-3-2026 செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம் முன்பு போர்ட்கிள்ளானில் அமையப் பெற்றிருந்ததாகவும் பின்னர் 1971 ஆம் ஆண்டு பண்டமாரான் ஜெயாவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு ஆலயம் சிறப்பாக இயங்கி வருகின்றது.

இந்நிலையில் இம்முறை நடைபெறவிருக்கும் மாசி மகம் திருவிழா 50 ஆவது ஆண்டு மாசி மகம் விழா என ஆலயத் தலைவர் ராஜரத்னம் தெரிவித்தார்.

இதனிடையே இத்திருவிழாவின்போது பக்தர்களின் வசதிக்காக ஆலய நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. காலை 9.00 மணிக்கு பண்டமாரான் தெய்வீக வாழ்க்கைச் சங்கப் பணி மனையிலிருந்து பக்தர்கள் பால் குடம் ஏந்தி ஆலயத்தை வந்தடைவார்கள்.

மாசி மகம் திருவிழாவிற்கு இவ்வட்டாரத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக இந்த ஆலயம் விளங்கி வருவதாகவும் இம்முறை ஆலயத்தின் திருவிழாவிற்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று ஆலய நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

திருவிழாவிற்கு மறுநாள் மார்ச் 3ஆம் திகதி புதன்கிழமை இரவு 7.00 மணிக்கு மேல் இரத ஊர்வலம் நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இவ்விழாவில் சிறப்பு பிரமுகர்களாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் , சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வீ.பாப்பாராய்டு, செந்தோசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் குணராஜ் உட்பட மேலும் பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பல்வேறு சிறப்பு அங்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாசி மகம் திருவிழாவில் சுற்று வட்டார மக்களும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆலய தலைவர் கேட்டுக் கொண்டார்.

மேல் விவரங்களுக்கு 016-3550444 ஆலயத் தலைவர் ராஜரத்னம்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!