
கோலாலம்பூர், அக் 13 – ஒரு கால் தற்போதைய கூட்டணியிலிருந்து வெளியேறி ம.இ.கா PN-னுடன் இணைந்தால் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தேசிய முன்னணியில்தான் இருப்பார்கள் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டுள்ளார்கள். அதே சமயத்தில் அவர்கள் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆகவே ம.இ.கா தேசிய முன்னணியை விட்டு வெளியேறினாலும் கட்சியின் மக்கள் பிரதிநிகள் தொடர்ந்து தேசிய முன்னணியிலேயே நிலைத்திருப்பார்கள் என இன்று நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார் விக்னேஸ்வரன்.
தற்போது ம.இ.கா சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.