Latestமலேசியா

மசூதியின் தொழுகைக் கம்பளத்தில் துர்நாற்றமுள்ள நீர் ஊற்றிய சம்பவம் – ஓட்டுநருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்

கிளந்தான், அக்டோபர் 19 – தும்பாட் (Tumpat) பகுதியிலுள்ள அல்-அஸீஸ் அல்-ஹாதி (Al-Aziz Al-Hadi) மசூதியின் தொழுகைக் கம்பளத்தில் துர்நாற்றமுள்ள சேற்று நீர், எலும்புத் துண்டுகள் மற்றும் முடிகள் ஊற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, 38 வயதுடைய ஆண் ஓட்டுநர் ஒருவர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தும்பாட் மாவட்டக் காவல் தலைவர் ஏசிபி முகமட் கைரி ஷாஃபி (Mohd Khairi Shafie) கூறுகையில், அக்டோபர் 5ஆம் தேதி இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். சந்தேக நபர் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது. இதுபோன்ற செயல்கள் வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தன்மையைப் பாதிப்பதாகக் குறிப்பிட்ட காவல்துறை, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!