Latestமலேசியா

மனைவியை அழைத்துச் செல்லும் வழியில் மரம் விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி பலி

அலோர் ஸ்டார், மார்ச்-16-கெடா, அலோர் ஸ்டாரில், 51 வயது மோட்டார் சைக்கிளோட்டி, சாலையில் திடீரென விழுந்த மரம் மோதி உயிரிழந்தார்.

நோன்புப் பெருநாளுக்குப் புத்தாடைகள் வாங்குவதற்காக, மனைவியை அழைத்து வர அவர் சென்றபோது விபத்து நிகழ்ந்தது.

அலோர் ஸ்டார் தீயணைப்பு நிலையம் அருகே நிகழ்ந்த சம்பவத்தில், Ahmad Farazi Kasim அங்கேயே உயிரிழந்தார்.

அருகில் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தார்.

சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக் கூறிய மாவட்ட போலீஸ், மரம் விழுந்ததற்கான காரணம் வானிலையா அல்லது கட்டமைப்பு பலவீனமான என்ற கோணங்களில் ஆய்வு செய்யப்படுவதாகக் கூறிற்று.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!