
மலாக்கா, ஜூலை 17 – மலாக்காவிலுள்ள குழந்தை பராமரிப்பு மையமொன்றில் 6 மாத குழந்தை ஒன்று மூச்சி திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்ததாக நம்பப்படும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு பணிப்புரிந்துக் கொண்டிருந்த பராமரிப்பாளர், நீல நிற முகத்துடன் குழந்தை முகம் குப்புறக் கிடப்பதைக் கண்டு உஜோங் பாசிர் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் குழந்தைக்கு CPR உதவி வழங்கப்பட்ட நிலையில், முன்னதாகவே குழந்தை இறந்து விட்டதென்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
குழந்தையின் உடலைப் பரிசோதித்ததில் எந்தக் குற்றவியல் அடையாளங்களும் காணப்படவில்லை என்றாலும் அதே நாளில் மற்றொரு மூன்று வயது சிறுமியின் இடது காதில் பராமரிப்பாளர் ஒருவர் அடித்ததால் காயம் ஏற்பட்டுள்ளதென்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குழந்தைப் பராமரிப்பில் அலட்சியமாக இருந்ததற்காக, குழந்தைகள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றதென்று மலாக்கா தெங்கா காவல்துறைத் தலைவர் கிறிஸ்டோபர் பாடிட் குறிப்பிட்டுள்ளார்.