Latest
மலாக்காவில் கூரைப் பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

மலாக்கா, நவம்பர் 17-மலாக்கா, தாமான் புக்கிட் லாராங் இண்டாவில் ஒரு வீட்டின் மேல் கூரையில் வேலை செய்து கொண்டிருந்தபோது,
மின்சாரம் தாக்கி 52 வயது தொழிலாளி உயிரிழந்தார்.
நேற்றிரவு 9 மணியளவில் MERS 999 மூலம் அவசர அழைப்பு கிடைத்து தீயணைப்பு – மீட்புப் படையைச் சேர்ந்த 5 வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
அவர்கள் சென்று சேர்ந்தபோது அத்தொழிலாளி பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
அவரை stretcher மூலம் கீழே இறக்கி முதலுதவி அளித்த போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
பின்னர் மேல் விசாரணைக்காக உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.



