
கோலாலம்பூர், டிச 18 – மலாக்கா டுரியான் துங்கலில் போலீசாரால் சுடப்பட்டு மூவர் மரணம் அடைந்தது குறித்த கொலை விசாரணை குறித்து ஊகங்கள் அல்லது ஆருடங்களை வெளியிட வேண்டாம் என சட்டத்துறை தலைவரின் அலுவலகமான ஏ.ஜி.சி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு தொடர்பான பொதுமக்களின் விவாதம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுவதோடு , விசாரணை செயல்முறையின் நேர்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் AGC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(விசாரணை மறுவகைப்படுத்தல்) கட்டத்தில் எந்தவொரு குற்றவியல் குற்றமும் புரியப்பட்டுள்ளதாக அர்த்தப்படுத்தக்கூடாது.
விசாரணையை சமரசம் செய்யக்கூடிய அல்லது நீதி அமைப்பின் மீதான நம்பிக்கையை குறைக்கக்கூடிய ஊகங்களையோ, அனுமானங்களையோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதையோ தவிர்க்குமாறு சமூக ஊடக பயனர்கள் உட்பட பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சட்டத்துறை தலைவரின் அலுவலகம் வலியுறுத்தியது.
குற்றஞ்சாட்டக்கூடிய எந்தவொரு முடிவும் சட்டம் மற்றும் ஆதாரங்களின்படி
எடுக்கப்படும் .
நீதியின் நடைமுறை மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் அனைத்து நலன்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று AGC எல்லா தரப்புக்கும் நினைவுறுத்தியுள்ளது.



