Latestமலேசியா

மலாய்க்காரர்களுக்கு ஏன் கொடுத்தீர்கள் என்று நாங்கள் கேட்கவில்லை; இந்தியர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை என்று தான் கேட்கிறோம் – சிவராஜ்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-27 – மலாய்க்காரர்களுக்கு மட்டும் எல்லாம் ஏன் கிடைக்கிறது என்றோ அவர்களின் சிறப்புரிமைகள் குறித்தோ நாங்கள் கேள்வி எழுப்பவில்லை;

இந்தியச் சமூகத்துக்குக் கிடைக்க வேண்டியவை ஏன் கிடைக்கவில்லை என்று தான் கேட்கிறோம்; அதில் தவறேதும் இல்லை என செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கூறியுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சமூகத்துக்கு வேண்டியதை கேட்டு பெறுவது எங்கள் கடமையும் பொறுப்பும் ஆகும்.

அதைத் தான் மக்கள் மன்றத்தில் கேட்கிறோம்; அதுவும் கூடாது என்றால் வேறு எங்கு எப்படி கேட்பது என சிவராஜ் கேள்வி எழுப்பினார்.

இந்தியச் சமூக விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவை செயற்குழு கிடையாது; அமைச்சரவையில் இந்தியச் சமூகத்தின் குரலாக விளங்க ஓர் இந்திய அமைச்சரும் இல்லை.

இந்த நிலையில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களாக நாங்களும் சமூகத்தின் குரலாக ஒலிக்க முடியா விட்டால் எப்படி என சிவராஜ் கேட்டார்.

இந்தியச் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு வேண்டியவற்றை நாங்கள் கேட்கத்தான் வேண்டும்; தொடர்ந்து கேட்போம்…

அதற்காக மலாய்க்காரர்கள் குறித்தோ மற்ற இனங்கள் குறித்தோ நாங்கள் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை; அவரவர் உரிமையை மதிக்கிறோம் என சிராஜ் தெளிவுப்படுத்தினார்.

இந்தியர்களுக்கான அரசாங்கத்தின் அனுகூலங்கள் குறித்து கேள்வி எழுப்புங்கள், ஆனால் மலாய்க்காரர்களுக்கு ஏன் அதிகம் கிடைக்கிறது என கேட்காதீர்கள் என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேசியிருந்ததற்கு சிவராஜ் மேலவையில் பதில் வழங்கினார்.

13-ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய போது அவர் அதனைத் தெளிவுப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!