
கோலாலம்பூர், நவம்பர்-6,
மலேசியக் கடப்பிதழ் தற்போது உலகிலேயே 3-ஆவது சக்திவாய்ந்த கடப்பிதழாக 2025-ஆம் ஆண்டுக்கான கடப்பிதழ் குறியீட்டு பட்டியலில் உயர்ந்துள்ளது.
மலேசியர்கள் 174 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வருகை நேர விசாவுடன் பயணம் செய்ய முடிவது, இம்முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்.
இது மலேசியாவின் அனைத்துலக உறவுகள் மற்றும் தூதரக வலிமை அதிகரித்துள்ளதையும் காட்டுவதாக, குடிநுழைவுத் துறை கூறியது.
விசா இல்லாமல் 179 நாடுகளுக்கு சென்று வர அனுமதிக்கும் ஐக்கிய அரபு சிற்றரசின் கடப்பிதழே உலகின் அதிசக்தி வாய்ந்த கடப்பிதழாக திகழ்கிறது.
அப்படி 175 நாடுகளுக்கு சென்று வர வகை செய்யும் சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் கடப்பிதழ்கள் இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன.
மூன்றாமிடத்தை மலேசியாவுடன் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் பகிர்ந்துள்ளன.



