Latestஅமெரிக்காஇந்தியாஉலகம்சிங்கப்பூர்மலேசியா

மலேசியா-இந்தியா இலக்கவியல் மன்றம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

கோலாலம்பூர், ஜன10, – இந்தியாவின் புபனேஸ்வரில் நடைபெற்ற 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் மலேசியா-இந்தியா இலக்கவியல் டிஜிட்டல் மன்றம் – (MIDC) அதிகாரப்பூர்வ தொடக்கம் கண்டது. மலேசிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு இடையிலான அதிகாரப்பூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இந்த மன்றம் தொடக்கம் கண்டது. இதன்வழி இலக்கவியல் வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் துறைசார் வல்லுனர்களின் பரிமாற்றம் என, இருநாட்டு இலக்கவியல் துறையை இயக்கத் தயாராக உள்ளது என அவர் தெரிவித்தார். மேலும் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க முனேற்றத்தையும் இந்த மன்றம் பிரதிபலிக்கிறது. பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை வலுப்படுத்தும் அதே நேரத்தில், இரு நாடுகளின் இலக்கவியல் புத்தாக்கம், துறைசார் திறன் மற்றும் பொருளாதார வாய்ப்புகளையும் மேலும் விரிவுபடுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கோபிந்த் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையே கணினி அவசரகால பதிலளிப்பு குழுக்களுக்கு-(Computer Emergency Response Teams CERTs) இணைய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும். அதே வேளை 5G தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களில் ஒத்துழைக்கவும், 5G தொழில்நுட்பம் தொடர்பான வாய்ப்புகளை ஆராயவும் இந்த மன்றம் செயல்படும். MIDC-யின் தொடக்க கூட்டம் இந்த ஆண்டின் முதல் பாதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டபோது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை வலுப்படுத்தும் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களுக்கான அடித்தளத்தை MIDC முன்னெடுக்கும். இதனிடையே இந்திய வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் , Digital India Foundation மற்றும் Open Network for Digital Commerce (ONDC) ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் கோபிந்த் சிங் சந்தித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!