Latestசிங்கப்பூர்மலேசியா

மளிகைப் பொருட்களுக்குள் மறைத்து 1,000 வேப் கருவிகளைக் கடத்திய மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் 14 வார சிறை

சிங்கப்பூர், ஜனவரி-24-சிங்கப்பூரில் மலேசிய இளைஞர் ஒருவர் வேப் பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

21 வயது அமிருல் இக்பால் நஸ்ரின், வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஒரு வாடகைக் காரில் 1,000 வேப் கருவிகளை மறைத்து கொண்டு வந்தபோது பிடிபட்டார்.

நவம்பர் மாதத் தொடக்கத்தில் முதல் முறையாக வெற்றிகரமாக கடத்தி 320 சிங்கப்பூர் டாலரை சம்பாதித்த அவர், இரண்டாவது முயற்சியில் சிக்கினார்.

அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதால் நீதிமன்றம் இக்பாலுக்கு 14 வாரங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

சிங்கப்பூர் சட்டப்படி, வேப் போன்ற போலி புகையிலைப் பொருட்களை இறக்குமதி செய்தால் அதிகபட்சம் 6 மாத சிறையும் 10,000 சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!