
கோலாலாம்பூர், டிசம்பர் 18-டிஜிட்டல் கல்வி விரிவாக்கம் கண்டிருந்தாலும், மாணவர்கள் இன்னமும் பள்ளிக்கு கைப்பேசிகள் உள்ளிட்ட தொடர்புச் சாதனங்களை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் அதனை மறுஉறுதிப்படுத்தினார்.
இந்தத் தடை மாணவர்களின் நலனையும், பாதுகாப்பான கல்வி சூழலையும் உறுதிச் செய்யும் என, மேலவைக் கேள்வி நேரத்தின் போது அவர் சொன்னார்.
2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, கற்றல் நோக்கத்திற்காக மட்டும் சில விதிமுறைகளின் கீழ் சாதனங்களை பயன்படுத்த அனுமதி உண்டு.
அதே நேரத்தில், மாணவர்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC-யும் போலீஸும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
இந்நிலையில், டிஜிட்டல் கல்வியை வலுப்படுத்தும் முயற்சியாக DELIMA தளத்தில் 99% ஆசிரியர்களும், 64% மாணவர்களும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது, கைப்பேசிகள் இல்லாமல் கூட, மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வி வாய்ப்புகள் விரிவாக வழங்கப்படுவதாக ஃபாட்லீனா சொன்னார்.



