
நூசா தெங்காரா, ஜூன்-18 – இந்தோனேசியாவின் கிழக்கு நூசா தெங்காரவில் உள்ள Lewotobi Laki-Laki எரிமலை மீண்டும் வெடித்துச் சிதறியுள்ளது.
வானில் சுமார் 11 கிலோ மீட்டர் உயரத்திற்கு அது புகையையும் சாம்பலையும் கக்கியுள்ளதை, வைரலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காண முடிகிறது.
இதையடுத்து எரிமலை வெடிப்பு எச்சரிக்கை ஆக அபாய கட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கனமழை பெய்தால் எரிமலை குழம்பு பாய்ந்தோடக் கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவலேதும் இல்லை.
இந்த Lewotobi எரிமலை இதற்கு முன் கடந்த மாதமும் மார்ச்சிலும் வெடித்தது.
அப்போது ஏராளமான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1,584 சென்டி மீட்டர் உயரம் கொண்ட இந்த Lewotobi எரிமலை இந்தோனேசியாவில் இன்னமும் தீவிரமாக உள்ள 127 எரிமலைகளில் ஒன்றாகும்.