Latestமலேசியா

மீரியில் கல்லறைகளில் கைவரிசை; 9 சந்தேக நபர்கள் கைது

மீரி, அக்டோபர்-29,சரவாக், மீரியில் கல்லறைகளில் அத்துமீறி கைவரிசை காட்டிய சம்பவம் தொடர்பில் 9 பேரைப் போலீஸ் கைதுச் செய்துள்ளது.

கல்லறைகள் அவமதிக்கப்பட்டதாகப் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, முன்னதாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் அக்டோபர் 11 முதல் 17 வரை நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 16 முதல் 73 வயது வரையிலான அந்த 9 ஆடவர்களும் கைதாகினர்.

அவர்களில் மூவர் ஏற்கனவே குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளனர்.

அந்த மூவரில் இருவர், இதேபோல் கல்லறைகளில் அத்துமீறியதற்காக கைதாகி, அண்மையில் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், இரும்புச் சுத்தியல், திருப்புளி, பல்வேறு நகைகள், மோதிரங்கள், தோடுகள், சங்கிலிகள், கை வளையல்கள் மற்றும் பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த கைது நடவடிக்கையின் மூலம் மீரியில் இத்தகைய 14 கல்லறை அத்துமீறல் சம்பவங்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக போலீஸ் நம்புகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!