Latestஉலகம்

முதுகு சொறிந்தால் மாதம் RM60,000 வருமானம்! சீனாவில் வரவேற்பைப் பெறும் வித்தியாசமான சேவை

பெய்ஜிங், செப்டம்பர்-5,சீனாவின் Shenzhen நகரைச் சேர்ந்த 32 வயது ஆடவர் ஒருவர், Suma என்ற பெயரில் ‘முதுகு சொறியும்’ புதுமையான மையத்தைத் தொடங்கி மாதத்திற்கு 100,000 யுவான் அதாவது சுமார் 15,000 அமெரிக்க டாலர் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

​உடம்புபிடி மையங்கள் போலச் செயல்படும் இந்தக் கடைகளில், வாடிக்கையாளர்களைப் படுக்கவைத்து, சிறப்பு நகங்களைப் பயன்படுத்தி ஊழியர்கள் அவர்களின் உடலை மிருதுவாகச் சொறிந்து விடுகின்றனர்.

​ஒரு மணி நேரச் சேவைக்கு 300 யுவான் அல்லது சுமார் 40 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கவும் தூக்கத்தின் தரத்தை உயர்த்தவும் இந்த சேவை பெரிதும் உதவுவதாக, ‘பயனடைந்த’ வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

​சிறுவயதில் தந்தை தனது முதுகைச் சொறிந்து தூங்க வைத்த நினைவால் ஈர்க்கப்பட்டு இச்சேவையைத் தொடங்கியதாகக் கூறும் அவ்வாடவர், சீனா முழுவதும் 100 கிளைகளைத் திறக்க இலக்கு வைத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!