
கோலாலம்பூர், Nov 5 – மலேசியாவில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 53,245 முஸ்லிம் தம்பதிகள் விவாகரத்து செய்திருப்பதாக மலேசிய ஷரியா நீதித்துறையான JKSM தெரிவித்துள்ளது. இதில் சிலாங்கூர் மாநிலம் 10,774 விவாகரத்து வழக்குகளுடன் அதிக எண்ணிக்கையை பதிவு செய்துள்ள நிலையில் ஜோகூரில் 6,078கவும், கெடாவில் 4,582கவும், பேராக்கில் 3,908கவும், கிளந்தானில் 3,820கவும் விவாகரத்தில் எண்ணிகைகள் பதிவாகியுள்ளன.
பொறுப்புகளை புறக்கணித்தல், குற்றச்செயலில் ஈடுபாடு, பராமரிப்பு வழங்கத் தவறுதல், குடும்ப வன்முறை, காணாமல் போகுதல், பொருளாதார சிக்கல்கள் மற்றும் நம்பிக்கையின்மை ஆகிய ஐந்து முக்கிய காரணிகள் விவாகரத்துக்கு வழிவகுத்திருப்பதாக JKSM தலைவர் ஹாகிம் ச்யாரியாஹ் டத்தோ’ முகமட் அம்ரான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விவாகரத்துகளை தடுக்கும் முயற்சியாக திருமணத்திற்குப் பிறகு பெற்றோர் மற்றும் குடும்ப மேலாண்மை தொடர்பான பாடநெறிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.



