Latestமலேசியா

மூன்று முக்கிய நிகழ்வுகளுக்கு 856 போக்குவரத்து காவல் வீரர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்

கோலாலம்பூர், அக்-2-இவ்வார இறுதியில் கிள்ளான் பள்ளத்தாக்கில் நடைபெறவுள்ள மூன்று முக்கிய அனைத்துகக நிகழ்வுகளையொட்டி, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்ய 856 போக்குவரத்துக் காவல் வீரர்களும் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

LTdL சைக்கிள் பந்தயம், சிப்பாங்கில் நடைபெறும் F1 பந்தயம் மற்றும் கோலாலம்பூர் Standard Chartered மாரத்தான் போட்டி ஆகியவற்றுக்காக முழுமையான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக Bukit Aman போக்குவரத்து குற்றப் புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநர் Datuk Seri Muhammad Hasbullah Ali தெரிவித்தார்.

LTdL போட்டிக்காக 16 அதிகாரிகளும் 146 பணியாளர்களும், F1 பந்தயத்துக்காக 15 அதிகாரிகளும் 352 பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். F1 பணிக்காக கூடுதலாக 130 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

KL மாரத்தானுக்காக அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மொத்தம் 327 அதிகாரிகளும் பணியாளர்களும் கடமையில் ஈடுபடுவர். நாளை காலை 6 மணி முதல் குறிப்பிட்ட சாலைகள் கட்டங் கட்டமாக மூடப்பட்டு, காலை 10 மணியளவில் மீண்டும் திறக்கப்படும்.

அக்டோபர் 4 ஆம் தேதி 21 கி.மீ. மற்றும் 42 கி.மீ. போட்டிகளுக்காக அதிகாலை 2 மணி முதல் சாலைகள் மூடப்படும். பங்கேற்பாளர்கள் பாதைகளைக் கடந்தவுடன் சாலைகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு, காலை 11.30 மணிக்குள் முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு Hasbullah கேட்டுக் கொண்டார். F1 பந்தயத்தைக் காணச் செல்வோர் Shuttle பேருந்துகளைப் பயன்படுத்துமாறு அவர் ஆலோசனை கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!